மூவேழாண்டு முந்தைய நட்பின் அழைப்பு
வீட்டின் அழைப்பு மணியில் ரிங்காரமிடுகிறது
நட்புகள்...
ஆர்ப்பாட்ட அகமகிழ்வோடு இயல்பாய்
வீட்டின் அழைப்பு மணியில் ரிங்காரமிடுகிறது
நட்புகள்...
ஆர்ப்பாட்ட அகமகிழ்வோடு இயல்பாய்
நலம் சுகிக்க பின்னோக்கி நகர்கிறது நாட்கள்....
ஆகாய கூட்டங்களாய் நட்பான காலமது
கேலி கூத்துகளிடையே காலியான மன காயங்கள்
துயில் கலையுமுன் மீண்டுமோர் குட்டி தூக்கம்
அறிமுக நாட்களில் உதிர்ந்த மரியாதை நிமித்த வார்த்தைகள்
பிருந்தா முதல் மணிமேகலை வரை மதிப்பெண் இட்டு
மகிழ்ந்த வேளை எனக்கான மதிப்பெண் முத்தமாய் விழ

வீழ்ந்த என் மனதுக்கு நட்பின் கேலி கரவொலிகளென
நுகர்ந்து சென்றது ஆராவாரமான நினைவுகள்....
நட்புகள் பலர் நலமாய் மேன்மையில் உளவென
நட்பு கூற மனமேனோ குளிர்ச்சியில் நனைகிறது
நல்லறமேற்ற நட்புக்கு என்றும் மேன்மையேயென
சொல்லிச் சிரிக்கிறது வெகுளி உதடுகள்
செருக்கில்லா நட்பவனது பேச்சிலும் மகிழ்வு செழிப்புடன்
தொடர் பேச்சில் எச்சில் விழுங்க முடியா நிகழ்வு பல
மனதை தட்டிப் பார்க்க அஞ்சலியாய் மெளனங்கள்
மீண்டுமோர் முறை இழந்தவை பெற்றிடலாமென
நொடிகள் கரைந்து கொண்டிருக்க விடை பெறும் தருணம்
ஆரத்தழுவிய நட்பு
இல்லம் ஓர் முறையேனும் வாயேன்...! என்றிட
கண்ணீர் பெருகி தோள் சாயந்திட....
கண்ணீர் துளி மட்டும்
அவனோடு........
அவனில்லம் நோக்கி பயணிக்கிறது
****பிரகாஷ்சோனா****

அக்கா என்ற பதவியுடன் உன்னுடன் நட்பு மட்டுமே விழைகிறேன். உன்னுடைய நட்பு வட்டத்தில் நானும் உண்டு தானே......
பதிலளிநீக்கு