தமிழுக்கு அமுதென்று பேர் : அந்ததமிழ்.... இன்பதமிழ்.... எங்கள் உயிருக்கு நேர்
தரணிக்கு முதல் மொழி தமிழ்... அவள் தொடர்ந்து வந்த மொழிகளுகெலாம் தாய்
தமிழரின் பண்பாடு தமிழ்..... அது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுரைக்கும்
தமிழரின் கல்வி தமிழ்.....அது கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன், நற்றார் தொழா அர் எனின் என்றுரைக்கும்
தமிழரின் சமூகம் தமிழ்......... அது எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்றுரைக்கும்
தமிழரின் நாகரீகம் தமிழ் ........அது பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நணி நாகரீகர் என்றுரைக்கும்
தமிழரின் நாடு தமிழ் ....அது வடா அது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும் என்றுரைக்கும்
தமிழரின் உறவு தமிழ் அது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுரைக்கும்
தமிழரின் வேதம் தமிழ் அது தீதும் நன்றும் பிறர்தர வாரா என்றுரைக்கும்
தமிழரின் வேகம் தமிழ்....... அது வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க என்றுரைக்கும்
தமிழரின் விவேகம் தமிழ்...... அது எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு என்றுரைக்கும்
தமிழரின் வாழ்வியல் தமிழ்...... அது மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும், எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறை(வு) இலை என்றுரைக்கும்
தமிழரின் வரலாறு தமிழ்...... அது கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்றுரைக்கும்
தமிழரின் வீரம் தமிழ்...... அது நாமர்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்றுரைக்கும்
தமிழரின் காதல் தமிழ்...... அது கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய், முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்றுரைக்கும்
தமிழரின் ஆழம் தமிழ்...... அது கங்கைபோல் காவிரிபோல் கருத்துகள், ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம் என்றுரைக்கும்
தமிழரின் அழகு தமிழ்..... அது நோக்கு புவனது நோக்கல் தன்மைத்து என்றுரைக்கும்
தமிழரின் அறம் தமிழ்..... அது மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்றுரைக்கும்
தமிழரின் ஈகை தமிழ்..... அது அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கியொளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் என்றுரைக்கும்
ஆக்க தொகுப்பு
__ தம்பிரான்தோழர் கபிலனார் ___
இது போன்று தமிழினை ஆழப்பதியம் போட்டு தொந்தமிழான செந்தமிழை..நற்றமிழாய் பேணி காத்து பைந்தமிழோடு தீந்தமிழாய் நம்மில் பகிர்வோரை எங்ஙனம் புகழ்வது, தமிழரின் ஒட்டு மொத்த வாழ்வியலும் தமிழோடுதான் என்று உரைபோரை எங்ஙனம் வியப்பது, தமிழர் தமிழ் ஆய்வினை உற்று நோக்கி,மேற்கோளிட்டு தமிழின் ஈர்ப்பினை நோக்கி எனையும் எனை போன்றோரையும் உந்திதள்ளிய ஐயனே உமக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
பெருவுடையான்

வணக்கம்...
பதிலளிநீக்குவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு