வெள்ளி, 9 மார்ச், 2012

தாய்மையே போற்றி ! பெண்மையே போற்றி !

சிற்றின்ப போகம்
சினைப்பை சுமக்கும் தேகம்
சதை நரம்புருவாக்கும் பட்டறை
இல்லை இல்லவே இல்லை

இவள்
அன்பின் ஆழ்கடல்
அணைப்பில் ஆழிபேரலை
இவளின் உதயம் உலகுக்கான
ஊழியம் அவ்வளவே

அஃதிலை
இவளின் உதயம் உலகுக்கான
ஊதியம் ஆம் ஊதியமே

பிறப்பை மறந்து
உறவை சேர்க்கும் உன்னதம்
உணர்வை புதைத்து
இல்லையில்லை
உணர்வை விதைத்து உலகை இணைக்கும்
சங்கமம்

இருபாலருக்கும் உண்டு முலையிரண்டு
தேனூர் அமுது சுரப்பது எம் பெண்டீர்கே
தரணியெங்கும் உண்டு இருபாலர்
ஆளுமை செய்வது எம் பெண்டீரே

ஆம்
வான்முகிலாய் மதியாய்
பூமலராய் நீரோடையாய்

பிள்ளையின் ஏக்கமும்
நோக்கமும் அறிந்தவள்-அதனால்
பலநாள் தூக்கம் இழந்தவள்
உலகுக்கு நிதானத்தை கற்பித்தவள்

ஆம்
பேதையாய் பெதும்பையாய்
மங்கையாய் பெண்மையாய்
தாய்மையாய் அதுவும் பொறுமையாய்

தாய்மையில் தாயை நோக்கியவள்
பெண்மையில் தாய்சேயை தழுவியவள்
தாரமாய் தனை தாரை வார்த்தவள்

ஆம்
சொல்லிழந்து செயலிழந்து தேகம் மெலிந்து
தள்ளாடும் கிழவியை தழுவியவள்

சமுதாய சீரழிவில் ஒன்றிரண்டு
சிக்கிருக்கலாம் சில விரசமும் இருக்கலாம்
விதிவிலக்கல்ல

ஆம்
வாடகைதாய் கற்புசூறை தாசியாட்டம்
கேளிக்கையாட்டம் - இவ்
விச்சையும் ஒச்சமும் பெண் புகழ் மிரட்சியில்
ஒடுங்கட்டுமே அனைத்தும் ஒழியட்டுமே

சரி... சரிசரி
உன் புகழ் பாடி
கவி வழியில் நிருத்தற் குறியிட்டு
உனை யினங்கான விருப்பமுமில்லை
உன் வதை தனை கதையில்
வகை படுத்தும் நோக்கமுமில்லை
ஆ வென்று வியக்க நீ விந்தையுமில்லை

நீ ஓர் இயக்கம் அங்கம் - என்
பூமிதாயின் சுழற்ச்சி ஊற்று
இல்லையில்லை சுனையூற்று
நீ எமது சுவாசம்

ஆம் எம்மக்காள்
இவளை வதைத்து புதைத்து கதைத்து
வீழ்த்தாதீர் வீழ்வது நம் சமுதாயமே
இதை விடுத்து

பெண்ணுக்கு ”மை” போட்டுதான் பாருங்களேன்
பெண்மையின் தன்மை புரியும்
பாவையின் புதினம் புலப்படும்
மங்கையின் மாட்சி தெரியும்


என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா

1 கருத்து: