புதன், 28 மார்ச், 2012

ஓ...! பெண்ணே


பழமை படித்ததாலென்னமோ
என் எண்ணம் சுருங்கிவிட்டதோ
பாரும் அறிந்ததால்தான் -உன்
ஆடையும் குறைந்துவிட்டதோ

மாற்றான் தாய் பிள்ளையானாலும்
நீ..! தமிழ் தாயின் மங்கையடி-நாம்
மானங்காத்த மறக்குடியடி -நம்மை
மறக்க வைக்குதடி நுனிநாக் காங்கிலம்

மேலை நாட்டு மொழியும் நம்மை ஆட்கொள்ளுதே
கீழை நாட்டில் நம் தொன்மைகள் அகப்படுதே
நம் நாட்டில் மட்டும் உணராதது ஏனடி பெண்ணே
அந்நிய மொழியும் இருக்கட்டுமடி எம் மொழி வதைபடாமலே

மொழி...! உனக்குமெனக்குமான புரிதல் மட்டுமேயடி
அஃது உலகை கற்கும் கல்வியொன்று மில்லையடி-பிறநாட்டு
நல்லறிஞர் சாத்திரங்கள் நம்மொழியில் பெயர்க்க பாரதி சொன்னானடி
தமிழ் மொழியை மறக்க சொல்லலையடி.. பெயர்க்க சொன்னானடி

தனிமனித சுதந்திரத்தில் தலையிடலை பெண்ணே
தனியாத என் ஏக்கத்தை சென்னேன் கண்ணே
இறுகிய ஆடைக்குள் புதைத்திடாதே -நம் தமிழ் 
தனித்துவத்தை தங்கிலீசால் நறுக்கிடாதே

உன் அப்பன் சொப்பனம் இதுவல்ல பெண்ணே
பாரதியின் புதுமைபெண்ணாய் நீ இரு கண்ணே
நிறை மங்காய்..! உனை குறையொன்றும் சொல்லலையடி
உன்னொளி கண்டே ..! நம் குலம் தழைக்குமடி

தமிழன்னையின் உயிர் உன் கையிலடி-அவளுயிர்
காக்க உன் பிள்ளைக்கு சிறிதேனும் தமிழ்பால் ஊற்றடி
பீறிட்டு அழும் குழந்தையும் வீறிட்டு எழுமடி -என்
தமிழன்னையும் சிறப்பாய் தவழ்வாளடி

படிப்படியாய் எம் குடி தழைக்க உம் மடியே சிறந்ததடி
கலப்பில்லா தமிழ் வளர்க்க நீயே தகுதியடி
தொன்மை தமிழை செம்மை படுத்தவே-பெண்ணே
களப்பணி காண வருவாயோடி

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக