வியாழன், 3 மே, 2012

திகைப்புடன்... காகிதங்களை தேடி

தேடிப்பிடித்த எழுத்துகள் 
வரிகளாகுமுன்
காகிதங்கள் கசங்குவதும்

நெடுநேர விழித்தலுக்கு பின்
விழிகள் அயர்வதும்

நடுநிசியில் நிர்மூலமான
அரைகுறை நித்திரையும்
வழக்கமாகிட......

சேவல் கூவி விடியாத இரவுகள்
அலார ரிங்காரத்தில் விடிய
காலை நேர தேனீரும் 
கசப்பாய்...

எந்திரலோக பயணத்தில்
நான்.....

வழியெங்கும் செவித்திரைக்கெட்டிய 
துர்நாற்றங்கள் காட்சி பிழைகளாய் 
ஆங்காங்கே...

ஒவ்வா மனவியல்புகளுடன்
ஒன்றிய மாமேதைகள்
பணந்திண்ணி கழுகுகளாய்

சுழலுலகின் சூழலால் 
சுழலில் சிக்கிய 
மனுதர்ம மறியா மானிடர்கள்

கல்வி யாது மொழி யாது -என
அறியாது... சமூக சுமைகளுடன்
மழலை பிஞ்சுகள்

அன்று முதலின்று வரை -எம்
பெண்டுகளை போக புசித்தலாகவே
காணும் காமுகர்கள்

அன்பு களைந்த பற்றுதலாய் 
மெய் களைந்த உந்துதலாய் 
மதங்கள்...மடாதிபதிகள்

இவைகளை எங்ஙனம் களைவது
திகைப்புடன் 

மீண்டும்... 
கண்டதை வரிகளாக்கிட 
காகிதங்களை தேடி 
எழுத்துகளுடன் யான்....

***பிரகாஷ் சோனா***

2 கருத்துகள்:

  1. மீண்டும்...
    கண்டதை வரிகளாக்கிட
    காகிதங்களை தேடி
    எழுத்துகளுடன் யான்....

    எண்ணங்களை எழுத்தில் தேடும் பெருவுடையானே...
    பெரும் எழுத்துக்காரனப்பா நீ.,..! அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் பல... தாமிரபரனி பொதிகை வழி வந்தமைக்கு

      நீக்கு