வியாழன், 31 மே, 2012

தேன் நிலவு

தேன்...
ஆதிமனிதனின் முதல் உணவு
சுவைகளின் முதல்வன்
பூலோகத்தின் அருமருந்து
பூக்களின் சொத்து

லட்சம் போராளிகளை(தேனீக்களை)
வென்றெடுத்த அமுது

நெடுந்தூர பயண களைப்பில்
தோள் சாய்ந்து கிடந்தவளை
மறந்தே போனான் அமுதன்

மூன்று வருட மரண சுகம் அனுபவித்த
காதல் வாழ்க்கைக்கு பின்
சிறகு விரித்த பறவையாய் அவர்களின்
தேன் நிலவுக்கான பயணம்

பெயருக்கேற்ப கொஞ்சி பேசுவதில்
அவள்... தேன் மொழிதான்

அவன், தேடல் கொண்டவன்.
போராளி, காதலிக்கும் போது
அவளின் மனதை அறிய முற்ப்பட்ட
போராளி.

ஏன் நெடு நேர மெளனம்
ஏதும் சிந்தனையா
அமுதனின் மெளனத்தை கலைத்தால்
தேன்மொழி

இந்த தேனீக்களுக்கு
சுறுசுறுப்பும் கட்டுகோப்பான ஒற்றுமையையும்
யார் சொல்லி தந்தார்கள்
என்று சிந்தனை

அவை ரிங்காரமிட்டு ஆடி பாடி அப்படி
என்னதான் பேசிகொள்ளும்
என்று சிந்தனை

தோள் சாய்ந்தவள்
வாள் பார்வை வீசி

நீங்கள் தேன் பிரியரா

ஆம்... இந்த தேன் மங்கை
மீது பிரியம் கொண்டவன்

போதும்... தேன் தெவிட்டிவிட போகிறது

தேனோடு இந்த அமுதன்
சேர்ந்திருப்பதால்
தெவிட்டாது கண்ணே..

கட்டியணைத்து , தேனீக்கள் அறியா
இதழ் மலரோடு இதழ் மலரில்
முத்தமிட்ட அவளை
மின்சார முத்த பாய்ச்சலை கலைத்தது
பெண்ணுக்கே உரித்தான நாணம்.

பொய்யான கோபத்தில்
மெய்யான வெட்க புன்னகை
உதிர்த்தாள்.

தேன்மொழி
அங்கே பார் மனிதனுக்கான
உணவு சங்கிலிக்கு
ஆயத்தமாகின்றன தேனீக்கள்

விளங்காமல் விழித்தாள் தேன்மொழி

தேனீக்கள் பூக்களின்
மகரந்த சேர்க்கைக்கு
ஆயத்தமாகின்றன பெண்ணே

ஆளுயர மரங்கள் புதர் மண்டிய காடுகளுக்கு
அப்பால் சூரியன் மறைந்தே கிடந்ததால்
இருள் மங்கிய சூழல்
வெப்பம் தனித்த மெல்லிய குளிர் காற்று
இருந்தும் மயங்கிய நிலையில் தேன்மொழி
காதல் மனம் கொண்ட புதுமண தம்பதியல்லவா

தேன் நிலவுக்கான விளக்கம் தெரியுமா அமுதன்

ம்ம்ம் சொல்கிறேன் கேள்

தம்பதியரின் உள்ளங்கைகளில்
தேனை ஊற்றி நிலவும் தேனும்
ஓர் கோட்டில் இணையும் நேரம்
இவர்களும் இணைந்து
தேனை ஒருவர் மாற்றி ஒருவர்
ஊட்டி விடும் தருணம் அது பெண்ணே

உன் கட்டுகதையை நிறுத்து
செல்ல முனுமுனுப்புடன்
தேன்மொழி

உன் ஒவ்வொரு வெட்க புன்னகையும்
ஒவ்வொரு தேன்துளி போலல்லவா இருக்கிறது

நான்
உன் தேன்துளி வெட்க புன்னகையை சேகரிக்க
அந்த தேனீக்களை விட படாது பாடல்லவா
படவேண்டியிருக்கிறது

தேனீக்கள்
தேனை சேகரிக்க
லட்சம் முறை பறக்கும்போது
உனக்கென்னவாம் எனை
லட்சம் முறை கூட
வெட்க புன்னகை சிந்த வை

தேன்மொழி
உன் நடை, இடை,  உடை
ஒரே மொழி பேசினாலும்
செவ்விதழ் பதித்த உன் முகம்
பல மொழி பேசுகிறதே அதிலும்
அந்த செவ்விதழோரம் சிறு
குறு குறு துடிப்பு ...அடடே
உண்மையிலே உன் மொழி
தேன்மொழி தான்

சோமபாணம் தேனில் உருவானது
பலமுறை படித்தும் மனம்
ஏனோ ஏற்கவில்லை

உன் இதழ் அசைவின் பேச்சில்
கிறங்கிதான் போயிருக்கேன்
உண்மையிலே சோமபாணம்
தேனில் உருவானது தான்

சிறு வெட்க புன்னகை களைந்து

அமுதன் அங்கே பார்
ரோஜா மலர்

ரோஜா இதழுக்கும் தேனுக்கும்
ஓர் தொடர்பு உண்டு
பிஸ்கட் உருவாக இவர்கள் தான்
முதல் காரண கர்த்தா

தேன்மொழி
இந்தா இந்த பூவின் தேனை ருசி
ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு ருசி

தேனிலவில் தேன்மொழியோடு
மனதில் ஓர் புது தெம்பு தான்

மங்கோலிய வீரன் செங்கீஸ்கானுக்கு
போர்கால உணவாய் தெம்பூட்டியது
அந்த தேனென்றால்
இந்த அமுதனுக்கு
தேனிலவில் தெம்பூட்டும் உணவாய்
நீ தானடி தேன்மொழி

வெட்க புன்னகையாள்
மீண்டும் நாணத்தோடு


எண்ணங்களும் எழுத்தும்
****பிரகாஷ்சோனா****




3 கருத்துகள்:

  1. அபாரம் நண்பா அபாரம் உரைநடையோடு..
    இருபாலருக்குமிடையேயான அந்தரங்கப்பொழுததனை...

    அமிழ்தும் தேனுமாய் அளவாய்ச் சமைத்து- ஆங்காங்கே ... தெவிட்டத்தெவிட்ட காதல் தேனூட்டி...

    இனிக்க இனிக்க உவமைக் கதைபேசி
    ருசிக்க ருசிக்க தேனிலவைச் சிந்திக்க வைத்தாய்...

    முன்பொருமுறை எழுத்தாளர் ஜெயமோகனின்
    காணொளியில் சொல்லி இருந்தார்


    குறுந்தொகையில் பூக்களை எவ்வளவு ரசித்து எழுதினான் சங்ககாலப் புலவனென்று...

    நீ எங்கள் காலப் புலவன் பூவிடும் தேனையும் அதனை புசித்திரும் தேனீயையும் காட்சிக்குள்ளாக்கியதனால்...

    தேனிலவுக்கு குறிஞ்சு பூத்த மலையடிவாரம் சென்ற தம்பதியினர் மறுநாளே கிளப்பிச்செல்ல யத்தனிக்கிறார்கள் ; காரணம் கேட்டால்

    பூக்களின் மீது கொண்ட மோகத்தால் என்னவளோடு பொழுதுகளை அதிகம் செலவழிக்க முடிவதில்லை.... என்கின்றான்.,

    ஜெயமோகனின் வார்த்தைகள் இவை; ஆம்... உன் கவிதை நடையிலும் அத்தம்பதியினர் பேசிக்களிக்கவே காலங்காணாது... என்றே ஐயம்!

    அருமை நண்பா தொடர்க....! தேனொழுகும் வெண்ணிலவாய்...! உன் எழுத்து....

    -கவிதைக்காரன்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_29.html?showComment=1383009193478#c3819328576732986169

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வாசிக்க வாசிக்க திகட்டாத தேன்... இந்த தேன் நிலவு

    பதிலளிநீக்கு