சாதீ ஒழிய பாடுபடும் பலர்,
சமய ஒழிப்பில் சிலர் ஆகி போகிறார்கள்.
இவ்விரண்டும் தேவையென்று சொல்லும் சிலரின் கருத்தடைவு யாதெனில், அவரவர் இனம் யாதென அறியவே இவையாம்.
பாவம், இரவல் வாங்கிய அறிவை கொண்டு சிந்திப்பவர்கள் போல
தமிழர் பண்டிகை எல்லாம் இந்துக்கள் பண்டிகை எனவும்,
இந்திய தேசம் இந்துக்கள் தேசம் எனவும் எண்னுவோர்க்கு என்ன சொல்லி புரிய வைப்பது.
மனிதரின் புறவாழ்வில் சாதீயும், அகவாழ்வில் மதமும் அகலா இடம் பிடித்து விட்டது. அறமும் வீரமும், ஊடலும் கூடலும், காதலும் களிப்பும் ,இருந்த மனித வாழ்வில் சாதி கம்பளம் விரிக்கபட்டு மதங்கள் வீருநடை போட்டு கொண்டுதான் இருக்கிறது. இதில் எம் தமிழினம் காலந்தோரும் ஒன்றுபடாமல் பிரிக்கபட்டே கிடக்கிறது
தமிழ்...
சைவத்தமிழ்
வைணவதமிழ்
சமணத்தமிழ்
என சமயங்களால் வளர்க்கபட்டது போல் இனிவருங்காலம் சாதிகளால் வளர்க்கபட்டு விடுமோ
இத்தருணம் நாம் காணும் தமிழ், சமயங்களால் வளர்க்கபட்டு அழிவின் விளிம்பில் மிஞ்சியவைகளே
மிஞ்சியவை சாதிகளால் வளர்க்க பட்டால் இனியும் எஞ்சுவது கடினமே, எனும் ஐயப்பாடே என்னில் நிலவுகிறது
இன்றய சூழலில் தமிழ் பேசுபவன் யாரென்றால், முதலிடம் பிடிப்பவர்கள் அரசியல் கட்சி தலைவர்களே, பிறமொழி கலப்பில்லாமல் பேசினாலே அவனை அரசியல் கட்சிகாரனாகவே பார்க்கிறது சமூகம் ,என்னை பொறுத்தவரையில்
சமூகம் வளர அரசியல்ஆட்சி நடத்தியது போய், சாதிசமய வளர்ச்சியில் ஒண்டிகுடித்தனம் நடத்துகின்றன ஆட்சிகளும் & கட்சிகளும்
சமூக வளர்சியில் பூர்வகுடி இனவளர்ச்சியை மேம்படுத்தாத அரசுகள், கடைநிலை குடிமகனின் தேவையை சீர்குலைக்கும் சாதி சமயத்தை சீர்படுத்தாத அரசுகள், கண்டம் விட்டு கண்டம் கொள்ளையடித்தது போதாதென்று, கோள்விட்டு கோள் சென்று கனிம வளங்களை கொள்ளையடிக்க தயாராகி வருகிறது . இது தான் இன்றைய நிலையில் எம் தேசத்துக்கான வளர்ச்சி
சாதியம் ஒழிக்க பாடுபட்டவர்களின் பெயர் கூட இன்று சாதி பட்டியலில் ,இனம் காக்க பாடு பட்டவர்களின் பலரது பெயர் இனபட்டியலில் கிடைப்பது அரிதே
சமணர்களுக்கு பிடிக்காத ஐந்திரம் எனும் இலக்கண நூல் பாணினியால் அழிக்க பட்டது போல் சாதிசமயங்களால் தமிழும் ,எம் இனமும் அழியபடாமல் இருந்தால் சரி
(ஐந்திரம் வழியாக அகத்தியத்தின் துணையோடு தொல்காப்பியர் நூலியற்றியதாக தொல்காப்பியரின் சக மாணவரான பனம்பாரர் கூறுகிறார்)
பெருவுடையான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக