செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வளரும் நாடு

பதினெட்டு வருசமா வளர்த்த பெண்ணை

கலியாண சந்தையில விக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க பேரமும் பேசறாங்க


கட்டழகு மேனி கொண்ட கன்னியவள்

களவி சந்தையில விக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க ஜொள்ளு விடறாங்க


அன்னையவள் பசிதீர்க்கும் அன்னமவள்

பங்கு சந்தையில விக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க ஸ்டாக்கும் வைக்கிறாங்க


புரியா வயதின் பாலகன் அவன்

கல்வி சந்தையில விடுறாங்க

நாலு பெரிய மனுசங்க நிதியும் வாங்கறாங்க


வீரதீர துடிப்புள்ள இளைஞன் அவன்

கட்சிகள் சந்தையில திணிக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க ஊத்தியும் கெடுக்குறாங்க


நாடு வளருதுன்னு சொல்றாங்க அதை

செய்தியாவும் போடுறாங்க என்னன்னு கேட்டு

சொல்லுங்க போக்கத்த பயலின் ஏக்கத்த போக்குங்க

இவன்
பிரகாஷ்சோனா

வியாழன், 8 செப்டம்பர், 2011

புலம்பல்

பஞ்சமெல்லாம் பஞ்சாய் பறந்திட
வஞ்சமில்லா வல்லமை தாராயோ
எண்ணிலடங்கா துயரம் போக்க
ஆசைதனை களைவாயோ

வந்த பசிதீர
வழியேதுமில்லையோ
வாழ்வியலை கற்றதனால்
வாழவும் தகுதியில்லையோ

அதர்மமில்லா தர்மம்
உலகில் ஏதுமில்லை-இதை
குதர்க்கமென்போர்
தர்க்கத்தின் வழியில்லை

தத்துபித்து-2011

இலக்கியம் படி - பின்

இலக்கணம் மீற்


கவிதை வடி - பின்

காவியம் படை


காதலை கல் - பின்

கலியாணம் செய்


மெஞ்ஞானம் உணர் - பின்

விஞ்ஞானம் பேசு


இல்லறம் காண் - பின்

துறவறம் பூண்


இயல்பாய் இரு - பின்

ஈகை செய்


உறவை சேர் - பின்

ஊடல் கொள்


உண்மை பேசு - பின்

உலகை யேசு


சோசலிசம் ஏற் - பின்

கமியூனிசம் விடு

இவன்
பிரகாஷ்சோனா

கணிணி நட்பு

ஹாய் என்றாரம்பித்தது அவளின் கணினி நட்பு

காலங் கடந்தோடியது செல்ல சிணுங்கல்களுடன்

ஈரொரு வருடங் கழிந்து ஏனோ -அவளை

பார்க்க துடித்தது மனசு



சத்தியமா இது காதல் இல்லை



ஆவலை தெரிவித்தேன் சில நிமிடம்

கழித்து ”ம்” என்றாள் பவ்யமாய்

இனம் புரியா மகிழ்ச்சி-அவள்

என்னிடம் பகிர்ந்த எண்ண எழுத்துகளுடன்



கற்பனையில் அவளை சிலை வடித்தேன்

என் எழுத்துகளுடன் கனவில் சிறையும் வைத்தேன்



சத்தியமா இது காதல் சிலையுமில்லை சிறையுமில்லை



அந்நாள் வந்தது

நெஞ்சம் படபடத்தது

கால்கள் தடதடத்தது-பேச

சொல் வர மறுத்தது



அவளை கண்டேன் ஆப் ஆனேன்-என்

எண்ணஎழுத்துகளுடன் ஐக்கியமான முகமா இது



”ச்சே இருக்காது”



”நட்பே உறவே” அவளின் குரல்

ஆ” என் எண்ண எழுத்தே இவள்



எழுத்துக்கும் முகத்துக்கும் என்னடா சம்மந்தம் மனம் என்னை கடிந்து கொண்டது



என் நிலை அவளிடம் விளக்கினேன்



சிறிது நேர சிரிப்பொலிகளுடன்

அவள்



எழுத்துக்கு கற்பனை இருக்கலாம் எழுத்தோடு சேர்த்து எனக்கும் உருவம் கொடுத்தாயே அதுதான் தவறு அது காதலியா இருந்தாலும் சரி, நட்பு தோழமையாக இருந்தாலும் சரி என்றாள் புன்னகையுடன்



இப்போதுதான் உண்மையிலே காதலிக்க ஆரம்பித்தேன்

அவளது நட்பையும் எண்ணஎழுத்தையும்

நட்பிலும் காதல் உண்டு அது பந்தங்களின் இல்லற காதல் அல்ல

பல பந்தங்களை இணைக்கும் நட்புக்காதல்



இவன்

பிரகாஷ்சோனா

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

வேண்டாமே நட்பில் ஊடல்

நமக்குள் ஊடல் ஏன் தோழி

ஊடலின் காரணம் ஏதடி தோழி

காதலின் ஊடலால்-மனம்

அழுவது சரி தோழி

நட்பின் ஊடலால்-மனம்

அழுவது ஏன் தோழி

காதலில் ஊடல் நெஞ்சம்

சுகமாகும் தோழி

நட்பில் ஊடல் நெஞ்சம்

ரணமாகும் தோழி

நட்பின் உணர்வை புரிந்துகொள் தோழி

நாளும் நமதாகும் என் தோழி

ஊடலின் வலிமை புரியாதா என் தோழி

இனி ஊடலே வேண்டாம் நமக்குள் தோழி

காயா பழமா சொல்லடி தோழி

நிம்மதியாகட்டும் என் மனம் தோழி



உன் மனம் புரிந்தது என் தோழா

ஊடலின் வலிமை தெரிந்தது என் தோழா

கேட்பார் பேச்சின் விளைவே இது தோழா

நம்மில் இல்லை இனி ஊடல் தோழா

நாளும் வாழ்வோம் இனிதாய் தோழா

நட்பின் வலிமை எடுத்துரைப்போம் வா தோழா



தோழமைக்கில்லை இனி பிரிவினை

சொல்லிலுமில்லை திரிவினை

வள்ளுவன் தந்தான் நட்பின் கருவினை

நாமும் தருவோம் இனிய நட்பினை

காப்போம் நட்பினை;தகர்ப்போம் தீவினை



என்றும் உங்கள் தோழன்

பிரகாஷ்சோனா