செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வளரும் நாடு

பதினெட்டு வருசமா வளர்த்த பெண்ணை

கலியாண சந்தையில விக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க பேரமும் பேசறாங்க


கட்டழகு மேனி கொண்ட கன்னியவள்

களவி சந்தையில விக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க ஜொள்ளு விடறாங்க


அன்னையவள் பசிதீர்க்கும் அன்னமவள்

பங்கு சந்தையில விக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க ஸ்டாக்கும் வைக்கிறாங்க


புரியா வயதின் பாலகன் அவன்

கல்வி சந்தையில விடுறாங்க

நாலு பெரிய மனுசங்க நிதியும் வாங்கறாங்க


வீரதீர துடிப்புள்ள இளைஞன் அவன்

கட்சிகள் சந்தையில திணிக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க ஊத்தியும் கெடுக்குறாங்க


நாடு வளருதுன்னு சொல்றாங்க அதை

செய்தியாவும் போடுறாங்க என்னன்னு கேட்டு

சொல்லுங்க போக்கத்த பயலின் ஏக்கத்த போக்குங்க

இவன்
பிரகாஷ்சோனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக