சனி, 16 ஜூன், 2012

ஓம் சாந்தி

வார்த்தையாலிட்ட ..தீ.. எனை
வருத்திவிட்டது-அத்தீ
வீரியம் கொண்டு
விருத்தியாகிவிட்டது

சூதாட்ட சொல் கொண்டு உனை
சுத்திகரிக்க பார்க்கிறாய் -உன்
சாகசம் அறியா என்மனதை
சங்கடபடுத்தி பார்க்கிறாய்

காரணம் வினவ
களவாணியை கண்டதை போல்
கூச்சலிடுகிறாய் எனை
குழப்பத்தில் ஆழ்த்துகிறாய்

பொறுமையிழந்து நிற்கிறேன்
போர்கால சிப்பாய் போல

சமாதனம் அடைய என் மனது
சங்கல்பம் எடுத்து கொண்டது - நீ...
சமரசம் பேசும் வரை
சல்லாபம் வேண்டாமென்று

அடைக்கலம் கேட்டு என்னில் நானே
ஆசுவாச படுத்திகொள்கிறேன்
இருந்தும் முடியவில்லை - உனை
ஈட்டிய மனதுக்குள்
ஈட்டுப்பத்திரமாய் நான்...

சாந்தி...சாந்தி...சாந்தி
சாந்தி...மனமே...சாந்தி


***பிரகாஷ்சோனா***


2 கருத்துகள்:

  1. காரணம் வினவ
    களவாணியை கண்டதை போல்
    கூச்சலிடுகிறாய் எனை
    குழப்பத்தில் ஆழ்த்துகிறாய்//அடைக்கலம் கேட்டு என்னில் நானே
    ஆசுவாச படுத்திகொள்கிறேன்// காரணம் தெரியாமல் குற்றம் சுமத்தப்படும் போது வரும் தவிப்பு ஒரு உயிர் வதைக்கும் வலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... பலரும் இதை உணர்ந்திருக்கலாம் பதிவை படித்ததோடு மட்டுமல்லாமல் உங்கள் உணர்வை கருத்தாய்யிட்டமைக்கு நன்றி காயத்ரி தேவி

      நீக்கு