இந்தா பக்கத்துல தான் ரெண்டு எட்ல போயிடலாம் அப்டினு பலர் சொல்றத கேட்டிருப்போம்
இந்த ரெண்டுக்கும் எட்டுக்கும் அப்டி என்னதான் தொடர்பு இருக்கு, சம்பந்தமே இல்லாம நடந்து போறதுக்கு எதுக்கு ரெண்டு எட்டுனு சொல்றாங்க இந்த ரெண்டையும் எட்டையும் பத்தி நம் முன்னோர்கள் என்ன தான் சொல்லிருக்காங்க,ஏதோ எனக்கு தெரிஞ்சவரைக்கும் நான் கற்றது வரைக்கும் சொல்றனே. தெரிஞ்சதை சொல்றேனு சொல்றதை விட தெரிஞ்சதை ஒரு குழப்பு குழப்பி தாரேன் நீங்க அப்டியே புடிச்சிக்கோங்க (அட குழப்பி விடறதுக்கும் யாராவது வேணும்ல)
இரண்டு : கண்ணிரண்டு, காலிரண்டு, கையிரண்டு
எட்டு : எண் ஜான் உடலமைப்பு
இந்த எட்டு ஜான் உடம்பை கொண்டு அக்கம் பக்கம் வேடிக்கை பாக்காம கையிரண்டும் வீசி நடந்தா போற தூரம் பக்கம் வந்திடும். அப்டினு வேற யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன். சரி திட்டாதீங்க நான் தான் முதல்லையே சொன்னேல்ல எதையாவது எனக்கு தெரிஞ்சதை குழப்பி தருவேன்னு...நீங்க திட்னாலும் எதோ இதுல உண்மை இருக்குற மாதிரிதான் தெரியுது (அப்பாடா குழப்பியாச்சி)
ஏதாவது ஆன்மீக குருமார்களிடம் இதை பற்றி கேட்டா அது சித்த சன்மார்க்கத்திற்கான வழின்னு மறைபொருள்ல சொல்லுவாங்க அது என்ன சித்த சன்மார்க்கம் ... எட்டு என்ற எண்ணிற்கு தமிழ் எண்களில் அ என்றும் இரண்டிற்கு உ என்றும் குறிப்பிடுவது உண்டு அ அடி உ உச்சி நு அர்த்தமாம் அதாவது உச்சி முதல் பாதம் வரைக்குமான ஓர் விதமான பயிற்சி அப்டினு ஒரு சாராரும் , எண் ஜான் உடலமைப்பை கொண்ட நாம் உலகில் உள்ள இருமைகளுக்கு உட்பட்டு தான் இருக்கிறோம் இவைகளை கடந்து கடை நிலையான வீடு பேறு அடைவது அதாவது இறைவனடி சேர்தலே இந்த இரண்டு எட்டும் அப்டினு மற்றொரு சாராரும் சொல்வாங்க
எது எப்டியோ இத படிச்சிட்டு நீங்க ஒரு முடிவுக்கு வந்துருப்பீங்க
கொசுரு
*********
* எட்டு போல நடைபயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு நல்லதாம்
* யோக முறைகள் எட்டு (இயமம்,நியமம்,ஆசனம்,பிராணயாமம்,பிரத்தியாகாரம்,தாரணை,தியானம்,சமாதி)
* சங்க இலக்கியத்தில் தொகை நூல்கள் எட்டு (நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,பதிற்றுபத்து, பரிபாடல்,கலித்தொகை,அகநானூறு,புறநானூறு)
* கணித முறை படி எட்டு இரட்டை எண் ஆகும்
* சித்தி முறைகள் எட்டு (அணிமா,மகிமா,கரிமா,லகிமா,ப்ராப்தி,ப்ரகாம்ய,ஈசத்வம்,வசத்வம்)
பிரகாஷ் சோனா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக