செவ்வாய், 20 டிசம்பர், 2011

நடைமுறை வழக்கில் உள்ள இணைச்சொற்கள்

அடுக்கடுக்கான  பல சொற்களை பேசுவதுண்டு அந்த சொற்களை இரட்டைகிளவி போலவும் எதுகை மோனை போலவும் இருக்கும் சில சொற்களுக்கு விளக்கம் தெரியும் சில சொற்களுக்கு விளக்கம் தெரியாது இருந்தாலும் அச்சொற்களை சரியான தருணங்களில் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றோம் (உதாரணமாக: அடிதடி,அக்கம் பக்கம் ,நேரங்காலம் ) இச்சொற்களை பற்றி ஆசிரியர் இளங்குமாரன் சொல் அகராதியில குறிப்பிட்டு இருப்பார் அந்த சொற்களை பற்றி இதோ உங்கள் பார்வைக்கு...

நெளிவு சுழிவு : ஒருவரிடம் உள்ளது உள்ளது படி பேசிகிட்டு இருக்கும் போது மற்றவர் கடிந்து கொள்வர் நெளிவு சுழிவு தெரியாம பேசறீயேன்னு,நெளிவு-ஒருவரது செயல் அறிந்தோ அல்லது சூழ்நிலை அறிந்தோ அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளுதல் சுழிவு-ஒருவரது செயல் அறிந்து அதற்க்கு தக்க சூழ்ச்சி வழியில் நடந்து கொள்ளுதல், அத கூட இப்ப போட்டு வாங்கறதுன்னு சொல்றாங்கல்ல அது போல

கணக்கு வழக்கு : அதுக்குன்னு ஒரு கணக்கு வழக்கு வேண்டாமா, அவனுக்கும்  எனக்கும் இனி எந்த கணக்கு வழக்கும் கிடையாது இப்டி ஏதாவது ஒரு சண்டையிலையோ ,இல்ல வேற எதாவது ஒரு சூழ்நிலையிலையோ நாம சொல்லியிருப்போம் இல்ல கேட்டிருப்போம்,கணக்கு-கணக்கிட்டு வைத்து கொள்ளுதல் வழக்கு-காலங்காலமாக(அ)வழக்கமாக செய்தல்

ஒளிவு மறைவு : ஒளிவு-சொல்லவேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு மற்றதை மறைத்து விடுவது மறைவு-எதுவுமே சொல்லாமல் எல்லாவற்றையும் மறைப்பது

ஏடா கூடம் :ஏடா-ஏடம் , அதாவது செருக்கு,கர்வம்,தடித்தனம் அதாவது கண்ணியமற்றவைகள் கூடம்-வஞ்சகம்,மறைப்பு அதாவது முறையில்லாமல்   போவது

உண்ணாம திண்ணாம : உண்ணாம-பேருணவு அதாவது சாப்பாடு திண்ணாம-சிற்றுணவு அதாவது டீ காபி முறுக்கு கடலை

அரசல் புரசல் : அரசல்-தன் காதால் நேரடியாக கேட்பது புரசல்-இன்னொருவர் அவர்கள் காதால் கேட்டு அதை நம் காதால் கேட்பது

வெட்டவெளி : வெட்டை-மேடான பகுதி வெளி-அகன்று விரிந்து பரந்து திறந்த வெளி பகுதி

வத்தலும் தொத்தலும் : வத்தல்-வறுமையில் வாடியிருத்தல் மெலிந்திருத்தல் தொத்தல்-நோயால் வாடியிருத்தல் மெலிந்திருத்தல்

பிக்கல் பிடுங்கல் : பிக்கல்-தனக்கான சொத்தை,பொருளை,பணத்தை உரிமையுள்ளவர்கள் பிரித்தல்(அ)கேட்டல் பிடுங்கல்-உரிமையுள்ளவரும் இல்லாதவரும்(அ) தனக்கான பங்குக்கும் மேலாக பங்கை(சொத்து,பொருள்,பணம்)பிரித்தல்

பழக்க வழக்கம் : பழக்கம்-ஒருவர் பல காலமாக செய்து வருவது வழக்கம்-பலரும் பலகாலமாக செய்து வருவது அதாவது மரபு வழி வழியாக வருவது

புள்ளை குட்டி : புள்ளை-ஆண் பிள்ளை குட்டி-பெண் பிள்ளை

பேர்புகழ் : பேர்-வாழும் காலத்தில் கிடைக்கும் பெருமைகள் புகழ்-நாம் இல்லாத போதும், இல்லாத காலத்திலும் கிடைக்கும் பெருமைகள்

நோய் நொடி : நோய்-உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிற பிணி நோய் நொடி-வறுமை

திக்குமுக்கு : திக்கு-வார்த்தை பேசமுடியாத நிலை முக்கு-மூச்சி வெளியிட முடியாத நிலை, தான் செய்த தவறை மற்றவர் அறிந்து விட்ட நிலையில் அச்சத்தில் உறைந்து போயிருத்தல்

சொல்லாம கொள்ளாம : சொல்லாமல்-வந்த விஷியத்தையோ(அ)போகின்ற விஷியத்தையோ சொல்லாதிருத்தல் கொள்ளாமல்-எதையும் பெறாமல் அதாவது வாங்காமல் செல்லுதல்

சீரும் சிறப்பும் : சீர்-மனமுவந்து பொருட்களை தருதல் சிறப்பு-மனமுவந்து பாராட்டுதல் புகழ்தல்

சின்னாபின்னம் : சின்னா(சின்னம்)-தனிமை ப்டுத்தல், தனித்தல்,பிரித்தல் பின்னம்-சிதைவுபடுத்துதல்,சேதபடுத்துதல்

சாக்கு போக்கு : சாக்கு-தான் செய்த தவறை பிறர் மீதோ ஏனைய நிகழ்வுகளின் மீதோ சொல்லி தப்புதல் போக்கு-செய்த தவறை மறைக்க திசை திருப்புதல்

சண்டை சச்சரவு: சண்டை-ஒருவரையொருவர் தாக்கி கொள்தல் அதாவது கைகலப்பு சச்சரவு-வாயால் திட்டிக் கொள்தல் வாய்சண்டை

சட்டதிட்டம் : சட்டம்-அரசால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை திட்டம்-காலங்காலமாக சமுதாயத்தால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை

கூடமாட : கூட-ஒருவருக்கு துணையாக(அ)உதவியாக இருத்தல் மாட-ஒருவருக்கு பேச்சு துணையாக இருத்தல்

ஏழை பாழை : ஏழை-வறுமையில் உள்ளவர் பாழை-ஒன்றுமில்லாதவர் வெறுமையாளி

ஆஞ்சி ஓஞ்சி : ஆஞ்சி(ஆய்ந்து)-ஓர்செயலை ஆராய்தல் ஓஞ்சி(ஓய்ந்து)-எதுவும் செய்ய முடியாமல் போதல்(அ)சோர்ந்து போதல்

அரைகுறை :அரை-சரிபாதி அளவு குறை-அரையிலும் குறைவானது

அருமைபெருமை : அருமை-தன் செயலால் உயர் தன்மை அடைதல் பெருமை-கல்வி,பதவி,செல்வம் ஆகியவற்றால் வரும் செல்வாக்கு

அக்கம் பக்கம் : அக்கம்-தான்,தான் இருக்கும் இடம்,வீடு பக்கம்-அருகில் இருப்பவர்(அ)அதற்கடுத்து இருப்பவர் இருக்கும் இடம்,வீடு






உதவிய பக்கங்கள்---- தமிழ் அகராதி, இணைச்சொல் அகராதி , விக்கிபீடியா

*****பிரகாஷ்சோனா*****

வெள்ளி, 25 நவம்பர், 2011

ருத்ராட்சமும் அதன் தன்மைகளும்

ருத்ராட்சம் , ருத்ராட்சத்தை பற்றி பல பதிவுகள் படித்திருப்பீர்கள் ,ருத்ராட்சத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்றவுடன் இது ஆன்மீக பதிவு என்று நினைத்து விட வேண்டாம் ,சரி நாம் விடயத்துக்கு வருவோம்.
ருத்ராட்சம் சிவபக்தர்கள் அணிய கூடியது, சைவர்களின் அடையாள சின்னம், ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது ,சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணிய வேண்டும், இதை அணிந்தால் பல விதிகளை கையாள வேண்டும் , என்று பலவாக சொல்லி கேட்டிருப்பீர்கள் .சரி அது அத்தோடு இருக்கட்டும் .பதிவை படித்துவிட்டு நீங்கள் அணிந்து கொள்ளலாமா வேண்டாமா என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.
ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கு, ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது ,அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,
 எலீயோகார்பஸ் சொராட்டஸ் (Elaeocarpus serratus)
எலீயோகார்பஸ் ட்யூபர்குலேட்டஸ் (Elaeocarpus tuberculatus)
எலீயோகார்பஸ் கானிட்ரஸ்(Elaeocarpus ganitrus) ஆகியனவாகும்.

                                                               ருத்ராட்ச மரம்
இவை தென் கிழக்கு ஆசிய பகுதிகளான இந்தோனேசியா,ஜாவா,சுமத்ரா,போர்னியோ வடக்கே இந்திய இமயமலை சாரல், நேபாளம், வங்கதேசம் அஸ்ஸாம்,ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகளில் விளைகின்றன. இவை 100அடி உயரம் வரை வளர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடியது,  25லிருந்து 36டிகிரி வரை தட்பவெப்பனிலையில் உள்ள பிரதேசங்களில் மட்டுமே வளரும் . இவை அவ்வளவு எளிதாக முளைக்காது ,இதனை பயிர் செய்தால் 1முதல் 2ஆண்டுகள் வரை முளைப்பே வெளியில் தெரியாது, இதன் இலை 

                                                             ருத்ராட்சப்பழம்  
                                                     
மினுமினுப்பான வெளிர் பச்சை நிறம், வெண்மை நிறப்பூக்கள், கருநீலப்பழம் ஆகிய அமைப்பை கொண்டிருக்கும்.
இவை ஏப்ரல்-மே மாதங்களில் பூ பூக்கும், ஜீன் மாதங்களில் காய்க்கும், ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
ருத்ராட்சம் மேற்சொன்னவாறு ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது, சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணியவேண்டும், என்று பரவலாக எண்ணபட்டதால் பலரும் அணியமலிருந்தனர் .ருத்ராட்சத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே  ருத்ராட்சம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து  ருத்ராட்சம் குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் ருத்ராட்சத்திற்கு மூன்று பண்புகள் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர் அவை

                        *சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
                        *காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic)
                       *அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive)  ஆகியன
ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகிய மாற்றம் பெறுகின்றனர். மேலும்  ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர்.மேலும் ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.அன்று முதல் வெளிநாட்டவர் முதல் உள்ளூர்வாசிகள் வரை அணிய தொடங்கினர் . ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு அதனையே முகங்கள் என்று சொல்வர், ஒரு கோடு இருந்தால் ஒரு முகம் என்றும் ,ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம் என்றும் கூறுவர் .இந்த மணிகளுக்கு இயற்கையாகவே துவாரங்கள் உண்டு, ருத்ராட்ச மணிகள் மூன்று நிறங்களில் உண்டு .செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்) ஆகும்.ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்க படுகின்றன.

ஏழுமுக ருத்ராட்சையின் உள்தோற்றம்
ஒன்பது முக ருத்ராட்சையின் உள்தோற்றம்
              



ருத்ராட்சமணிகள் எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும்  ஒரு கொட்டை இருக்கும், உதாரணமாக 5முகம் ருத்ராட்சம் என்றால் அந்த 5 முக ருத்ராட்ச மணிக்குள் 5 அறைகளும் 5 கொட்டைகளும் இருக்கும் . ருத்ராட்ச மணிகள் ஒரு முகம் முதல் 21 முகம் வரை கிடைக்கும்

இரண்டுமுகம்
   
மூன்றுமுகம்
நான்கு முகம்
ஐந்து முகம்
ஆறுமுகம்
ஏழு முகம்
எட்டு முகம்
ஒன்பது முகம்
பத்து முகம்
பதிநான்கு முகம்

பத்தொன்பது முகம்

த்ரிஜீடி
பதினோரு முகம்
பனிரெண்டு முகம்
பதிமூன்று முகம்
பழத்தினுள் ருத்ராட்ச கொட்டை




இப்போது சொல்லுங்கள் மருத்துவ குணம் கொண்ட இந்த ருத்ராட்ச மணிகளை அணியலாமா வேண்டாமா என்று , ருத்ராட்சம் அணியுங்கள் .நம்மிடம் இருக்கும் எதிர் மறை எண்ணங்கள் மறையட்டும்.

கொசுரு: 17முகம் ருத்ராட்சம்-99ஆயிரமாம்
                  15முகம்--37ஆயிரம்
                  14முகம்--19ஆயிரம்
                  19முகம்--1லட்சத்து 99ஆயிரம்
ஸ்ஸுப்பா இப்பவே கண்ணகட்டுதே நீங்க கவலை படாதீங்க நம்ம 5முகம் 6முகம் 4முகம் இப்டி வாங்கி போட்டுக்கலாம் அதெல்லாம் விலை கம்மி தானாம் 10ரூ முதல் 100ரூ வரை தாம்.ஒருமுகம் கிடைப்பது ரொம்ப அரிதாம்


நன்றி விக்கிபீடியா,ருத்ராட்சம், சிவனின் கண்கள்

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா












வியாழன், 24 நவம்பர், 2011

WHY THIS கொலைவெறி

தலைப்பை பார்த்தவுடனே ஒருமுடிவுக்கு வந்துரிப்பீங்க நான் என்ன சொல்ல போறன்னு நீங்க நினைத்தது சரிதான் நமது தமிழுக்கு வந்த நிலைமைய பார்த்தீங்களா.. என்னத்த சொல்ல

”கல்தோன்றா மந்தோன்றா காலத்தே மூத்த குடி தமிழ் குடி” இப்டி பெருமையா வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் இங்க நம்ம ஆளுங்க கிட்ட தமிழ் எப்டியெல்லாம் மாட்டிகிட்டு முழிக்குதுன்னு உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். தமிழை நம் முன்னோர்கள் சங்கம் வைத்து வளர்த்தார்கள்  இயல் இசை நாடக கலைகள் மூலம் வள்ர்த்தார்கள் என்று படித்திருப்போம் ஆனால் தற்போதைய நிலை தமிழ்சங்கங்கள் எங்கு இருக்கின்றது என்றே தெரியவில்லை கட்சி சங்கங்களும் சாதி சங்கங்கள் மட்டும்  தான் தென்படுகிறது . இயல்,இசை,நாடகம் இன்றும் இருக்கு நைந்து போககூடிய நிலையில் இருக்கு . சினிமாவின் மூலம் கொஞ்சம் அப்பப்ப உசுரோட இருக்கு .

முன்பெல்லாம் நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது திருவிழாக் காலங்களில் விடிய விடிய புராண கதைகளை மைய படுத்திய கூத்துகள் வீர ம்காராசாக்களை பற்றிய கூத்துகள் நடக்கும் விடிந்ததும் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் பாரம்பரிய மேளதாளங்கள் எல்லாம் நடக்கும் இப்படி நம் முன்னோர்கள் விட்டு சென்ற கலைகளின் மூலம் கூத்துகாரர்களும் தமிழை வளர்த்தனர்

அந்த கூத்துகள் தான் தற்போது சினிமாவாக உருப்பெற்றுள்ளது தற்போது சினிமா தமிழையும் நம் பாரம்பரியத்தையும் வளர்க்கிறதா என்றால்... அதற்கான பதிலை நான் கூற விரும்பவில்லை உங்களுக்கே தெரியும்

அதற்காக நம்மவர்கள் மீது குறை கூறவில்லை தமிழை நேசிப்பவர்கள் சுவாசிப்பவர்கள் அனேகம் பேர் உண்டு .முதலில் இரண்டு சம்பவங்களை உங்களிடம் பகிர ஆசை படுகிறேன்.

சம்பவம் : 1
  எனது பாட்டியின் இறப்பிற்க்காக நான் பிறந்த இருப்பிடத்திற்கு செல்ல நேர்ந்த்து அப்போது பாட்டி பிறந்த வளர்ந்த வாக்கபட்ட அணைத்து கதைகளையும் கூறி கூத்து கட்டினர் அப்படி கூத்து கட்டிய அதே கிராமத்தில் எனது அண்ணன் மகனும் இருக்கிறான் சென்ற இடத்தில் அண்ணனிடம் பேசி கொண்டிருந்தேன், அப்போது மகன் என்ன படிக்கிறான் என்று கேட்டேன் அவன் காம்போண்டு ஸ்கூல்ல படிக்கிறான்னு பெருமிதம் பட, மகன் குறுக்கிட்டு அது காம்போண்டு இல்லப்பா கான்வெண்ட் என்று சொல்லி கோபபட்டான் .

சம்பவம் : 2
எனது நண்பனை பார்க்க வேலூருக்கு சென்றிருந்தேன், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் குழந்தைகளிடம் என்ன படிக்கிறாய் என்று கேட்டேன், ஒருகுழந்தை 1st std என்றும் மற்றொரு குழந்தை LKG என்றும் புன் முறுவலாய் பதிலளித்தனர் .அவ்வாறு பேசிகொண்டிருக்கையில் மீண்டும் நான் என்ன சாப்பிடுவாய் மீன் சாபிடுவாயா, கறி சாப்பிடுவாயான்னு கேட்டேன் இரண்டும் சாப்பிட மாட்டேன் என்று சொன்னாள் சரி என்ன தா சாப்பிடுவ என்று கேட்டேன்.  ஃபிஸ் ,சிக்கன், எக் என்று சொன்னாள்.

இப்போது சொல்லுங்கள் தமிழ் என்ன பாடுபடுகிறது பார்த்தீர்களா, சரி அதவிடுங்க அது ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விடயம் பெற்றோருக்கான ஆசையும் கூட , சமீபத்தில் உறுமி இசை தகடு வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேதனையோடு ஒரு விடயத்தை சொன்னார். கமலஹாசன் சினிமாவில் தமிழ் வளர்ப்பது கடினம் என்றும்அவர் எவ்வளவு நொந்து அதை சொல்லியிருப்பார் என்பது எனக்கு தெரிகிறது என்றும் ஆனால்
சினிமாவில் இன்னும் தமிழ் வளர்க்க முடியும் என்பதற்கு உருமி ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.  எதற்காக இப்போது இதை கூறுகிறேன் என்றால் சமீபத்தில் தனுஷ் அவர்களின் 3 படத்திற்கான கானொளியை பார்க்க நேர்ந்தது அதை நீங்களே பாருங்க தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்து எப்டி கொலை பண்னிருக்கார்ன்னு இந்த பாட்டுல ஒரு வரி கூட தமிழே கிடையாது ஆனால் இது மூனுங்கற தமிழ் படத்துல வர்ர தமிழ் பாட்டு இதுல இன்னொரு வேதனையான விடயம் சினிமாவில தமிழ் வளர்ப்பது கடினம் என்று வேதனை பட்டவரின் மகளின் முன்னிலையில் தனுஷ் பாடுகிறார் (இதுக்கு தானா அம்மனி 7ம் அறிவுல அந்த கூவு கூவுனிங்ளா அம்மணி) 
இன்னுமொரு விடயம் அந்த படத்தில வரும் புறநானூற்று பாடலை பற்றி சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லி அதில் வரும் இரு களிரை மட்டும் என்னவென்று சொல்லாமல் அறிந்தோர் அறிவாராக தெரிந்தோர் தெரிவாராக என்று சொல்லி கொண்டிருக்கையில் அந்த இரு களிரின் விளக்கம் தெரியாததால் அரங்கில் அணைவரும் அமைதியாய் இருக்க ஒருவர் மட்டும் கைதட்டுகிறார் .அப்போது கவி பேரரசு இந்த வரி அவர் ஒருவருக்காக மட்டும் தான் புரியாதவர்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று வேதனையோடு சொல்கிறார். அந்தளவுக்கு நாம் தமிழை மறந்து தொலைத்து கிடக்கிறோம் .உடனே உனக்கு தெரியுமா என்று என்னிடம் கேட்டு விடாதீர்கள் தெரியாததால் தான் இந்த பதிவே எழுத நேர்ந்தது இதோ அந்த புறநானூற்று வரிகள்


”அதோ அதோ உன் ஒரு கரம் உருக்கி களிரொன்று எரிகின்றாய்…
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்”

இன்னுமொன்றையும் கூறினார் 
 இரண்டாம் நூற்றாண்டில் வருகிற பாட்டை 15ஆம் நூற்றாண்டு கதைக்கு 21ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறேன் என்று சொன்னார்


இப்ப முடிவா என்ன சொல்ல வர்ரேன்னா நம் முன்னோர்களின் வீரவாளையும் கலாச்சாரத்தையும் பொருட்காட்சியில வச்சிருக்கிற மாதிரி நமது தாய் மொழியையும் வச்சிராதீங்கன்னு சொல்றேன் கொஞ்சமாவது தமிழை கொல்லாம தமிழ் பேசுங்க தயவுசெய்து,  நம்ம காலையில இருந்து இரவு உறங்க செல்லும் முன் வரை தமிழுடன் கலந்து எத்தனை கலப்பட மொழிகளை பேசியிருப்போம் சற்று சிந்தித்து பாருங்கள்

வாழ்க தமிழ் ! ஓங்குக அதன் புகழ் !

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா











வியாழன், 20 அக்டோபர், 2011

மறத்தமிழன்

மறத்தமிழன்

இவ்வார்த்தையை நம்மில் பலரும் கூறி கொள்வதுண்டு, அதற்கான விளக்கம் தான் என்ன, மறம் என்ற அந்த ஒற்றை சொல்லுக்கு அப்படி என்னதான் தனித்துவம் இருக்கு; அதன் மத்துவம் தான் என்ன ,ஏதோ நான் இது வரை பயின்றதை வைத்து ஓர் விளக்கம் . தவறு என்றால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்.

மறம் என்ற ஒற்றை சொல்லில் தீரம், வீரம், சினம், சீற்றம், வலிமை, ஆற்றல், வெற்றி, அமர், அழித்தல், கொல்லுதல் என பத்தும் அடங்கியிருப்பது தான் இதன் சிறப்பு, சரி அப்படி என்னதான் இந்த பத்திலும் இருக்கிறது பார்ப்போம்..


தீரம் : எதையும் துணிவுடன் செயல்படுத்தும் திறன்


வீரம் :  பராக்கிரமமான மனவலிமை, எச்சூழ்நிலையிலும் தளரா மனம், ஆயிரம் பேர் எதிர்கொண்டாலும் ஒற்றை ஆளாய் நின்று எதிர்க்கும் திறன்


வலிமை : தனது நிலைபாட்டின் மீது உள்ள உறுதி பலம் அதாவது நக்கீரன் தனது வாதத்தின் மீதுவைத்துள்ள நிலைபாட்டை போல


ஆற்றல் :  எதையும் காலம் தாழ்த்தாமல் விரைவில் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருத்தல்


சினம் : கோபம்


சீற்றம் : அநீதிகளை கண்டு பொங்கி எழுதல்,& ஒரு செயலின் மீதான தீவிரம்


அமர் : உக்கிரமான போர்முறைகளில் கைதேர்ந்தவர்கள் எச்செயலிலும் பின்வாங்காதவர்கள்


அழித்தல் : ஓர் செயலுக்கு தீர்க்கமான முடிவெடுத்தல் அச்செயல் மீண்டும் உருப்பெறாமல்அழித்தல்


வெற்றி : செயல்களனைத்தையும் நீதிக்கு உடன்பட்டு களிப்புறுதல் தோல்விக்கு தினம் தினம் முற்று வைத்தல்


கொல்லுதல் : நீதிக்கு தலைவணங்கல் மனுநீதி சோழனை போல நீதிக்கு பின் தான் பந்தபாசமெல்லாம்

என்ன நண்பர்களே மறம் என்ற ஒற்றை சொல்லில் எப்படி நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா நமக்கும் இதில் அனேக செயல்கள் இருக்கும் ...இருக்காதா பின்ன நம் முன்னோர்கள் விட்டு சென்ற தடயங்களாயிற்றே....

திங்கள், 3 அக்டோபர், 2011

வா ! தோழா வா !

ஆகாசத்துல நடை பழகி

பால்வெளியில் வீதியுலா வரலாம்.!

சூரியனையுருட்டி பந்து விளையாடி

சந்திரனில் களைப்பாறலாம்.!

நவகிரகத்தையும் எடுத்து

தூண்களமைத்து வீடு கட்டி

சொர்க்க வாயிலை திறக்கலாம்..!

கரும்பள்ளத்துல எரிகல்லை வீசி-ஓர்

பேரொளி உருவாக்கலாம்.!

பூமியிலிருந்து வரும் நம்மவர்க்கு

விண்மீன் சமைத்து பரிமாறலாம்...!

புது யுத்தியை கையாளலாம்

வா தோழா வா...!

---பிரகாஷ்சோனா---

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வளரும் நாடு

பதினெட்டு வருசமா வளர்த்த பெண்ணை

கலியாண சந்தையில விக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க பேரமும் பேசறாங்க


கட்டழகு மேனி கொண்ட கன்னியவள்

களவி சந்தையில விக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க ஜொள்ளு விடறாங்க


அன்னையவள் பசிதீர்க்கும் அன்னமவள்

பங்கு சந்தையில விக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க ஸ்டாக்கும் வைக்கிறாங்க


புரியா வயதின் பாலகன் அவன்

கல்வி சந்தையில விடுறாங்க

நாலு பெரிய மனுசங்க நிதியும் வாங்கறாங்க


வீரதீர துடிப்புள்ள இளைஞன் அவன்

கட்சிகள் சந்தையில திணிக்கிறாங்க

நாலு பெரிய மனுசங்க ஊத்தியும் கெடுக்குறாங்க


நாடு வளருதுன்னு சொல்றாங்க அதை

செய்தியாவும் போடுறாங்க என்னன்னு கேட்டு

சொல்லுங்க போக்கத்த பயலின் ஏக்கத்த போக்குங்க

இவன்
பிரகாஷ்சோனா

வியாழன், 8 செப்டம்பர், 2011

புலம்பல்

பஞ்சமெல்லாம் பஞ்சாய் பறந்திட
வஞ்சமில்லா வல்லமை தாராயோ
எண்ணிலடங்கா துயரம் போக்க
ஆசைதனை களைவாயோ

வந்த பசிதீர
வழியேதுமில்லையோ
வாழ்வியலை கற்றதனால்
வாழவும் தகுதியில்லையோ

அதர்மமில்லா தர்மம்
உலகில் ஏதுமில்லை-இதை
குதர்க்கமென்போர்
தர்க்கத்தின் வழியில்லை

தத்துபித்து-2011

இலக்கியம் படி - பின்

இலக்கணம் மீற்


கவிதை வடி - பின்

காவியம் படை


காதலை கல் - பின்

கலியாணம் செய்


மெஞ்ஞானம் உணர் - பின்

விஞ்ஞானம் பேசு


இல்லறம் காண் - பின்

துறவறம் பூண்


இயல்பாய் இரு - பின்

ஈகை செய்


உறவை சேர் - பின்

ஊடல் கொள்


உண்மை பேசு - பின்

உலகை யேசு


சோசலிசம் ஏற் - பின்

கமியூனிசம் விடு

இவன்
பிரகாஷ்சோனா

கணிணி நட்பு

ஹாய் என்றாரம்பித்தது அவளின் கணினி நட்பு

காலங் கடந்தோடியது செல்ல சிணுங்கல்களுடன்

ஈரொரு வருடங் கழிந்து ஏனோ -அவளை

பார்க்க துடித்தது மனசு



சத்தியமா இது காதல் இல்லை



ஆவலை தெரிவித்தேன் சில நிமிடம்

கழித்து ”ம்” என்றாள் பவ்யமாய்

இனம் புரியா மகிழ்ச்சி-அவள்

என்னிடம் பகிர்ந்த எண்ண எழுத்துகளுடன்



கற்பனையில் அவளை சிலை வடித்தேன்

என் எழுத்துகளுடன் கனவில் சிறையும் வைத்தேன்



சத்தியமா இது காதல் சிலையுமில்லை சிறையுமில்லை



அந்நாள் வந்தது

நெஞ்சம் படபடத்தது

கால்கள் தடதடத்தது-பேச

சொல் வர மறுத்தது



அவளை கண்டேன் ஆப் ஆனேன்-என்

எண்ணஎழுத்துகளுடன் ஐக்கியமான முகமா இது



”ச்சே இருக்காது”



”நட்பே உறவே” அவளின் குரல்

ஆ” என் எண்ண எழுத்தே இவள்



எழுத்துக்கும் முகத்துக்கும் என்னடா சம்மந்தம் மனம் என்னை கடிந்து கொண்டது



என் நிலை அவளிடம் விளக்கினேன்



சிறிது நேர சிரிப்பொலிகளுடன்

அவள்



எழுத்துக்கு கற்பனை இருக்கலாம் எழுத்தோடு சேர்த்து எனக்கும் உருவம் கொடுத்தாயே அதுதான் தவறு அது காதலியா இருந்தாலும் சரி, நட்பு தோழமையாக இருந்தாலும் சரி என்றாள் புன்னகையுடன்



இப்போதுதான் உண்மையிலே காதலிக்க ஆரம்பித்தேன்

அவளது நட்பையும் எண்ணஎழுத்தையும்

நட்பிலும் காதல் உண்டு அது பந்தங்களின் இல்லற காதல் அல்ல

பல பந்தங்களை இணைக்கும் நட்புக்காதல்



இவன்

பிரகாஷ்சோனா

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

வேண்டாமே நட்பில் ஊடல்

நமக்குள் ஊடல் ஏன் தோழி

ஊடலின் காரணம் ஏதடி தோழி

காதலின் ஊடலால்-மனம்

அழுவது சரி தோழி

நட்பின் ஊடலால்-மனம்

அழுவது ஏன் தோழி

காதலில் ஊடல் நெஞ்சம்

சுகமாகும் தோழி

நட்பில் ஊடல் நெஞ்சம்

ரணமாகும் தோழி

நட்பின் உணர்வை புரிந்துகொள் தோழி

நாளும் நமதாகும் என் தோழி

ஊடலின் வலிமை புரியாதா என் தோழி

இனி ஊடலே வேண்டாம் நமக்குள் தோழி

காயா பழமா சொல்லடி தோழி

நிம்மதியாகட்டும் என் மனம் தோழி



உன் மனம் புரிந்தது என் தோழா

ஊடலின் வலிமை தெரிந்தது என் தோழா

கேட்பார் பேச்சின் விளைவே இது தோழா

நம்மில் இல்லை இனி ஊடல் தோழா

நாளும் வாழ்வோம் இனிதாய் தோழா

நட்பின் வலிமை எடுத்துரைப்போம் வா தோழா



தோழமைக்கில்லை இனி பிரிவினை

சொல்லிலுமில்லை திரிவினை

வள்ளுவன் தந்தான் நட்பின் கருவினை

நாமும் தருவோம் இனிய நட்பினை

காப்போம் நட்பினை;தகர்ப்போம் தீவினை



என்றும் உங்கள் தோழன்

பிரகாஷ்சோனா

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சீர்மிகு என் தமிழ்தாய்

சிந்தனைகளை

பெற்றெடுத்தவள்

பல கலைகளை

வளர்த்தெடுத்தவள்

வந்த வேதனைகளை

வென்றெடுத்தவள்

வீரமிகு மைந்தர்களுக்கு

உணர்வு பால் ஊட்டியவள்

அடிமுடி காணா - ஆதியும்

அந்தமுமாய் இருப்பவள்

கடல் கடந்தாலும் - அங்கும்

மாறா மணம் வீசுபவள்

சித்தம் தெளிந்தவனை -அவள்

பால் பித்தனாக்கியவள்

அவளே என் தமிழ் தாய்

அவளை என்றும் - என்

நெஞ்சில் குடியமர்த்தி

வாழ்த்தி வணங்குகிறேன்

வாழ்க தமிழ்! ஓங்குக அதன் புகழ்!

என்றும் தமிழின் செல்லபிள்ளை உங்கள் தோழன்

பிரகாஷ்சோனா

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தமிழ் மொழியின் தினசரி நாளேடுகள்

நம் நாட்டின் செய்திதுறை மற்றும் தொலைகாட்சி ஊடகதுறைகள் அபரி விதமாக வளர்ந்துள்ளது மகிழ்ச்சியானதே இவ்வளவு வளர்ச்சி கண்டும் குற்றங்களை மட்டும் தடுக்க முடியவில்லை எந்தளவுக்கு முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோமோ அந்தளவுக்கு குற்றங்களும் அதிகரித்து கொண்டுதான் செல்கின்றன சரி நாம் விஷயத்துக்கு வருவோம் நமது தாய் மொழியான தமிழில் எத்தனை பத்திரிக்கைகள் உள்ளது என்று பார்ப்போம்

தமிழ் மொழியின் தினசரி நாளேடுகள் :

நமது தமிழ் மொழியில் வெளியான முதல் செய்தி பத்திரிக்கை சுதேசமித்ரன் என்ற பத்திரிகையாகும்.இது 1882 ஆம் ஆண்டு திரு.ஜி.சுப்ரமணிஅய்யரால் துவங்கபட்டது 1904ல் பாரதியார் அவ்ர்கள் இந்த பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார் நாவல்களில் சிறந்த நாவல் என்று கூறப்படும் திரு.ஜானகிராமன் அவர்களின் நாவலான மோகமுள் இந்த பத்திரிகையில்தான் தொடராக வெளிவந்தது 1962ல் திரு.ஜி.சுப்ரமணிஅய்யரின் மறைவுக்குபின் வழிநடத்த முடியாத காரணத்தால் 1970ல் இந்த பத்திரிகை மூடபட்டது

1.தினத்தந்தி-1942ல் திரு.சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் தொடங்கப்பட்டது.

2.தினமணி-1934ல் திரு.t.sசொக்கலிங்கம் அவர்களுடன் தொடங்கப்பட்டது
new indian expressஆல் வழிநடத்தபடுகிறது

3.தினமலர்-1951ல் திரு.டி.வி.ராமசுப்பய்யரால் தொடங்கப்பட்டது

4.தினகரன்-கே. பி. கந்தசாமி அவ்ர்களால் தொடங்கபட்டு வழிநடத்த முடியாத காரணத்தால்
2005 முதல் திரு.கலாநிதி மாறன் அவர்களால் வழிநடத்தபடுகிறது

5.தினபூமி-1990 களின் பிற்பகுதியில் வெளியாகத் தொடங்கியது

6.தீக்கதிர்-மதுரையில் இருந்து வெளிவரும் செய்திதாள்

7.முரசொலி-1942ல் முன்னாள் முதல்வர் திரு.கலைஞர்.கருணாநிதி அவ்ர்களால்
தொடங்கபட்டது

8.நமது எம்ஜிஆர்-முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கபட்டது

9.விடுதலை-தந்தை பெரியார் அவர்களால் தொடங்கபட்டது

10.தமிழ்சுடர்-திரு.உஸ்மான் பயாஸ் அவர்களால் தொடங்கபட்டது

11.தினசுடர்-1963ல் தொடங்கபட்டது கர்நாடகாவிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிக்கை

12.மாலைமலர்-1977 திரு.சி.பா.ஆதித்தனாரால் கோவையில் தொடங்கபட்டது ஒரு மாலை
நாளிதழ்

13.மாலைமுரசு-

14.தமிழ்முரசு-2005 திரு.கலாநிதி மாறன் அவர்களால் தொடங்கபட்டது ஒரு மாலை நாளிதழ்

15.மாலைசுடர்-

16.தினகரன்-1932ல் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்
லேக்ஹவுஸ் நிறுவனம் வழி நடத்துகிறது

17.தினகுரல்-இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள் வீரகேசரி பத்திரிகையில்
ஆசிரியர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் தொடங்கபட்டது

18.வீரகேசரி-1930ல் திரு.சுப்ரமணி செட்டியாரால் தொடங்கபட்டது இது இலங்கையில்
வெளியாகும் தமிழ் செய்திதாள்

19.உதயன்-1985ல் தொடங்கபட்டது இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

20.விடிவெள்ளி-இது இலங்கையில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

21.காலைகதிர்-பிரித்தானியா(uk)விலிருந்து வெளியாகும் தமிழ் செய்திதாள்

22.மக்கள் ஓசை-1981 மலேசியாவில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

23.மலேசியநண்பன்-மலேசியாவில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

23.தமிழ்நேசன்-1924ல் தொடங்கபட்டது

24.ஈழமுரசு-பிரான்சில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

25.மக்கள்குரல்-1973 திரு.சண்முகவேல் அவ்ர்களால் தொடங்கபட்டது

26.தமிழ்முரசு-சிங்கபூரில் வெளியாகும் தமிழ் செய்திதாள்

எனக்கு தெரிந்த நாளிதழ்களை மட்டும் தெரிவித்துள்ளேன் இன்னும் நமது தாய் மொழியான தமிழ் நாளிதழ்களை பற்றி உங்களுக்கு தெரிந்தால் குறிப்பிடுங்களேன்

புதன், 20 ஜூலை, 2011

தமிழ்... தமிழ்....தமிழ்.....

தூரத்தேச பறவையாய் நம் தமிழினம் !

அந்நியபட்டு கிடக்குது தாயகத்திலேயே,

மீட்கதான் நாதியில்லை-வாழவும்வழியில்லை;

நாகரிகத்தின் முதற்படி தமிழினம்-இது தொல்லியலின் ஆய்வு

அநாகரிகத்தின் முதற்படி எதுவோ?

தமிழின் நிழலில் அந்நிய தேசத்து கயவர்கள்

தமிழன் - கயவர்களின் பிடியில்

விண்ணை பிளந்து கொட்டும் மழைதுளி நாம்

வற்றாத ஜீவநதியும் நாமே தமிழனை அழித்தாலும்

தமிழனின் எச்சமாய் தமிழ்

தமிழைஅழித்தாலும் தமிழின் எச்சமாய் தமிழன்

வாழ்க தமிழ்! ஓங்குக அதன் புகழ்!

என்றும் உங்கள் தேசத்துப்பிள்ளை
பி ர கா சு

சனி, 16 ஜூலை, 2011

எங்கேசெல்லும் இந்த பாதை...........


சிலநாட்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்று ஊடகங்கள் செய்தியை வெளியிட்டதிலிருந்து நேற்று முன்தினம் வரை அவருக்காக அழாத ரசிகர்களே இல்லை, அவருக்காக சிறப்புபூஜை,பரிகாரம்,வேண்டுதல்கள் இவ்வளவும் செய்தார்களே யாருக்காக எதற்காக எல்லாம் ரஜினி என்ற ஒரு கலைஞனுக்காக,

இவ்வாறு அவர்மீது அன்பு வைக்க என்ன காரணம்? ரஜினி அவர்கள் இவர்களுக்காக என்ன செய்திருக்கிறார்? அது அவர்களது ரசிகர்களுக்குதான்.......இவ்வளவு செய்தும் ரசிகர்களுக்கு மிஞ்சியது போலிஸ் தடியடி,அடிஉதை,எல்லாம் பழக்கபட்டதுதானே கலைஞனை கலைஞனாக பார்க்காமல் உயரியசக்தியாக பார்ப்பது நம்மவர்களிடம் மட்டுந்தான் உண்டு

வேறொன்றுமில்லை அவர்மீது வைத்திருக்கும் அதீத அன்புதான் காரனம் ஒரு பொருளின் மீதோ,ஒரு தனிநபரின்மீதோ..(உறவுகளும் இதில் அடக்கம்)அதீத அன்பு வைத்துவிட்டால் அவற்றை நாம் பிரியவிரும்பமாட்டோம்.ரஜினி அவர்களை பற்றியும் அவரது ரசிகர்களை பற்றியும் நிறைய பதிவர்கள் நிறைய எழுதிவிட்டனர் அவையெல்லாம் அவர்களின் அன்பின் வெளிப்பாடே யார்மீது? ரசிகர்களின்மீது..எதற்காக அய்யகோ..என் தமிழினம் திசைமாறி செல்கிறதே என்பதற்காக மட்டுமே..
இதற்காக ரஜினி அவர்கள் என்ன செய்ய வேண்டும் ,அவரது பிள்ளைகளுக்கு கடமைபட்டிருக்கிறாரோ இல்லையோ,அவரது ரசிகர்களுக்கு நிச்சயயம்கடமைபட்டிருக்கிரார்.

என்ன கடமை அடுத்து ராணா படத்தில் நடிப்பதா இல்லை ராணா படத்தில் நடிக்கும் முன் உங்கள் ரசிகனை சந்தியுங்கள் கடமைக்கு மன்றதலைவர்களை மட்டும் கூப்பிடாதீர்கள் கடைமட்ட ரசிகனையும் சேர்த்து அழையுங்கள் அவர்களுக்கு காசு பணமெல்லாம் தேவைபடாது குறைந்தபட்சம் அதீத அன்பு யார்மீதும் வைக்காமலிருக்க கற்று கொடுங்கள்

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்உங்களைபோல...............................வாழ்க தமிழ்

புதன், 13 ஜூலை, 2011

 பயணங்கள் முடிவதில்லை

நம் வாழ்கை பயணத்தில் சந்திக்கும் நபர்கள் ஏராளம் அவர்களில் குறிப்பட்ட சிலரை மட்டும் அதிகம் சந்திக்கின்றோம் அவர்கள் தான் தந்தை,தாய், சகோதரன் ,சகோதரி,உற்றார் உறவினர்கள் ,தோழ தோழியர்கள் சூரியனை சுற்றி கோள்கள் தனது சுற்று வட்ட பாதையை அமைத்து கொண்டது போல் நாமும் நம்மை அறிந்தோ அறியாமலோ இந்த நபர்களை சுற்றி அல்லது அவர்கள் நம்மை சுற்றி அமைத்து கொள்கிறோம் (அ) அமைத்து கொள்கிறார்கள் இடையிடையே ஒரு சிலர் வந்து போவர் அவர்களால் நன்மைகள் தான் அதிகம் ஆனால் மீண்டும் அவர்களை சந்திக்கதான் முடியாது மேலே குறிப்பிட்ட நபர்களால் நன்மைகள் உண்டு தீமைகள் குறைவு ஆனால் இன்னல்கள் அதிகம் நாம் வாழ் நாள் முழுவதும் சுமைகளுடனே பயணிக்கிறோம்..............பயணங்கள் தொடர வாழ்துங்கள் எனது பயணம் இனிமையாய்(சுமையாய்) தொடர